குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய கலகலப்பான, நகைச்சுவை கலந்த, பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் எடுக்கக்கூடிய தமிழ் சினிமா ஒரே இயக்குனர் என்றால் அது சுந்தர்.சி தான். அரண்மனை 3 என்கிற ஹாரர் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் காபி வித் காதல் என்கிற கலகலப்பான குடும்ப படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு தந்தையும் அவருடைய வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று மகன்களும் அவர்களுக்குள் ஏற்படும் பாச போராட்டங்களையும் மையப்படுத்தி சென்டிமென்ட் கலந்து பீல்குட் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி.

இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மறைந்த நடிகர் பிரதாப் போத்தன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகைகளாக அம்ரிதா அய்யர், மாளவிகா சர்மா, விஜய் டிவி திவ்யதர்ஷினி, பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இவர்களுடன் முக்கிய வேடத்தில் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 26ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.