Home News Kollywood ஜெயிலர் படத்தில் இணைந்த கேஜிஎப் நடிகர்

ஜெயிலர் படத்தில் இணைந்த கேஜிஎப் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தவிர கன்னட நடிகர் சிவராஜ் குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகர் ஹரிஷ் ராய் என்பவர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தில் கதாநாயகனுடன் இணைந்து அவருக்கு ஆதரவாக பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களாக இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தான் குணமடைந்துள்ளார் இந்த நிலையில் தான் அவருக்கு ஜெயிலர் பெற வாய்ப்பு தேடி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.