தனுஷ் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தனுஷ். கதாநாயகியாக இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எலி அவ்ரம் என்பவர் நடித்துள்ளனர்.
அதேபோன்று செல்வராகவன் தனுஷ் இவர்களின் கூட்டணியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் தனுஷ் ரெண்டு ராஜா என்கிற பாடலை தானே எழுதி பாடியுள்ளார்.
இந்த லிரிக் பாடல் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை பார்க்கும் போது தனுஷ் படங்களில் இருந்து இது சற்று வித்தியாசமான படமாக இருக்கும் என்பதையும் உணர முடிகிறது.