நடிகர் விக்ரம் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட பத்து வருட போராட்டத்திற்கு பின்னரே தனது முதல் வெற்றி படத்தை கொடுத்தார். அதன்பிறகு அடுத்தடுத்த வெற்றிகள் அவரை தேடி வந்தன. தற்போதும் முன்னணியில் இருக்கும் கதாநாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவர் பீக்கில் இருக்கும் போது அவரது மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார் துருவ்.
அதை தொடர்ந்து தற்போது மனசே என அவர் எழுதிய பாடிய ஆல்பம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘Battle Fest 2022’ எனும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் துருவ்.

அந்த சமயத்தில், இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று உலக இதய நாள் என்பதாலும் கல்லூரி மாணவிகள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடிய உற்சாகத்தில் உருவாக்கிய மனசே என்கிற அந்த ஆல்பம் பாடலை கிடாரில் இசை அமைத்து பாடினார்.