மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் லூசிஃபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக வெற்றிகரமான இயக்குனராகவும் அடி எடுத்து வைத்தார். இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லவரான மோகன்ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் வில்லனாக சத்யதேவ் நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன், சுனில், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் காட்ஃபாதர் வரும் அக்டோபரில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து தாறுமாறு என்கிற பாடல் வெளியானது இந்த பாடலுக்கு சல்மான்கான் சிரஞ்சீவி இருவரையும் ஒன்றாக நடனமாட செய்துள்ளார் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா.