அரண்மனை-3 படத்தின் வெற்றி படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் காபி வித் காதல். ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் சுந்தர் சி.யின் பாணியிலேயே வழக்கமாக குடும்ப பின்னணியுடன் சேர்ந்து உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.. வின்னர் படத்தை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற இன்னொரு ஹிட் பாடலான ரம்பம்பம் பாடலை இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்து இசையமைத்திருகிறார் யுவன் சங்கர் ராஜா. அந்த பாடலில் அவரும் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் பாடல்கள் உருவான விதம் குறித்து யுவன்சங்கர்ராஜா வெளியிட்ட மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இதில் சுந்தர்.சியும் தானும் இணைந்தால் இந்த பாடல்கள் எத்தனை கலகலப்பாக உருவாகும் என்பது குறித்து யுவன் சங்கர் ராஜாவும் பாடலாசிரியர் பா விஜய்யும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.