பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி வருகிறார் நடிகர் அஜித். இந்த படத்திற்கு துணிவு என தற்போது டைட்டில் வைக்கப்பட்டு அதன் இரண்டு போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். சமீபத்தில் மஞ்சுவாரியர் அஜீத்துடன் பைக்கில் சாகச பயணங்கள் மேற்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அஜித்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார் சமுத்திரக்கனி.
அந்த வகையில் அஜித்துடன் சமுத்திரகனி இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.