இந்த வருடம் தனுஷ் ரசிகர்களுக்கான கொண்டாட்டமான வருடம் என்று சொல்வதற்கு ஏற்ப அவரது படங்கள் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், கதாநாயகி பிரியங்கா மோகன், நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தப்படத்தில் நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், மூர், குமாரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படம் 70 களில் நடக்கும் கதையாக உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.