தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடுவது அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’, மிஷ்கினின் ‘அஞ்சாதே’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என ஏராளமான வெற்றி பெற்ற படைப்புகளின் திரைக்கதை, நூலாக வெளியாகி, வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

அந்தவகையில் அம்பாசமுத்திரம் அம்பானி’, திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார் திரைப்படத்தின் திரைக்கதையும் தற்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முதல் பிரதியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வெளியிட்டார். அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வரும் செப்-23ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஆதார்’ திரைப்படத்தில் அருண்பாண்டியன், கருணாஸ், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ற வகையில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.