தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் திருச்சிற்றம்பலம். அதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.
பத்து வருட இடைவெளிக்கு பிறகு தனுஷ், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள படம் என்பதாலும் கொடி, பட்டாஸ் ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பதாலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படமாக கேப்டன் மில்லர் படத்தைப்பற்றிய புதிய அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் நிவேதிதா சதீஷ், முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய ஜான் கொக்கேன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அனேகமாக அவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது.