ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமியும் மலையாள சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என்று அழைக்கப்படும் குஞ்சாக்கோ போபனும் இணைந்து நடித்துள்ள படம் ரெண்டகம். இந்தப்படம் மலையாளத்தில் ஓட்டு என்கிற பெயரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.
இந்தப் படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சற்று தாமதமானதால் இந்த படத்தின் வெளியீடு சற்று தள்ளிப்போய், வரும் செப்டம்பர் 23ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
மலையாளத்தில் தீவண்டி என்கிற ஹிட் படத்தை இயக்கிய டிபி பெலினி என்பவர் என்ற படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மலையாளத்திலும் குஞ்சாக்கோ முதன்முறையாக தமிழிலிலும் நடித்துள்ள படம் என்பதால் தமிழ் ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஈஷா ரெப்பா.
கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி தாதா ஆகவும் குஞ்சாக்கோ போபன் அவருக்கு சிஷ்யராகவும் நடித்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.. இந்த படத்தை நடிகர் ஆர்யாவும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.