தனுஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த படம் செப்-29ல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் முதல்முறையாக தனுஷ் தெலுங்கில் நடித்து வரும் சார் (தமிழில் வாத்தி) என்கிற திரைப்படம் டிச-2ஆம் தேதி வெளியாக உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கி’ அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

மற்ற முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, தணிகலபரணி, சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.