கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒருபக்கம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்கள் என்பதுடன், இன்னொரு பக்கம் அதிக கண்டெண்ட் கொடுத்தவர்கள் என்றால் இரண்டுக்குமே சொந்தக்காரர்களாக திகழ்ந்தவர்கள் டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சீரியல் நடிகை பாவ்னி.
அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அறிவிக்கப்படாத காதலர்களாகவே மாறினார்கள். அதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஒன்றாக இணைந்து ஆடினார்கள்.
இது ஒருபக்கம் இருக்க, தற்போது செந்தாமரையே என்கிற வீடியோ ஆல்பத்தில் இருவரும் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் சீக்கா என்பவர் இந்த ஆல்பத்திற்கான பாடல் மற்றும் கான்செப்ட்டை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த பாடலுக்கு ஜெரால்டு மற்றும் சசிதரன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக வீடியோ ஆல்பம் பாடல்கள் தனியாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த செந்தாமரையே ஆல்பம் அவர்களுக்கு திரையுலக பயணத்திலும் வாழ்க்கை பயணத்தில் புதிய வாசல் ஒன்றை திறந்து விடும் என எதிர்பார்க்கலாம்.