V4UMEDIA
HomeNewsKollywoodபனாரஸ் படத்திற்காக கவர்ந்திழுக்கும் பாடலைப் பாடிய ஜாஸி கிஃப்ட்

பனாரஸ் படத்திற்காக கவர்ந்திழுக்கும் பாடலைப் பாடிய ஜாஸி கிஃப்ட்

தமிழில் ஒரு புதிரான காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் பனாரஸ். இந்த படத்தை ஜெயேந்திரா என்பவர் உள்ளார். சையத் கான் மற்றும் சோனல் மாண்டெய்ரோ ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

வரும் நவம்பர் 4-ஆம் தேதி இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து ட்ரால் பார்ட்டி பாடல் வெளியாகி உள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை ஜாஸி கிப்ட் என்பவர் பாடியுள்ளார்.

இவர் பிரபல மலையாள இசையமைப்பாளரும் கூட. இன்னும் சொல்லப்போனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பரத் நடித்த ஃபோர் ஸ்டுடென்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற லஜஜாவதியே என்கிற பாடலையும் அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க என்கிற பாடலையும் தனது காந்தக் குரலால் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த ஜாஸி கிப்ட்.

தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த பனாரஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தி இருக்கிறார். பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது யூட்யூப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது

Most Popular

Recent Comments