அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ட்ரிகர். வரும் செப்டம்பர் 23ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். ஏற்கனவே 100 என்கிற படத்தில் அதர்வாவும் சாம் ஆண்டனும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதனால் தற்போது ட்ரிகர் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் மற்றும் பல குணச்சித்திர நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் சின்னி ஜெயந்த் நடித்திருப்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.
காரணம் அதர்வாவின் தந்தை முரளி, தான் நடித்து வந்த காலகட்டத்தில் பல படங்களில் கல்லூரி செல்லும் இளைஞன் ஆகவே நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கல்லூரி தோழனாக மற்றும் முரளி நடித்த பல படங்களில் அவருடன் நண்பனாக இணைந்து நடித்தவர் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த். குறிப்பாக இதயம் படத்தில் நட்புக்கு இலக்கணமாக இருந்த இவர்களது நடிப்பு இப்போதும் பேசப்படுகிறது.

இந்தநிலையில் முரளியின் மகனுடன் இணைந்து நடித்த நடித்துள்ள சின்னி ஜெயந்த் இன்று நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவரது மகன் அதர்வாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்துள்ளார்.. ஒரு ஆக்ஷன் நிறைந்த ஆங்கில படத்தில் நடித்த அனுபவம் போல் இந்த படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்சனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்” என்று பாராட்டினார்.

அதேபோல சின்னிஜெயந்த் குறித்து அதர்வா பேசும்போது, “அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார். என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார்” என்று பதிலுக்கு பாராட்டினார்.