ஒரு திரைப்படம் ஹிட் ஆகும்போது அதில் நடித்தவர்கள் அணிந்துள்ள உடைகளோ அல்லது அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பொருளோ ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆவது வாடிக்கை. அப்படிப்பட்டவை உடனடியாக விற்பனைக்கும் வந்து விடுவது வழக்கமான ஒன்றுதான்.
அப்படி சமீப வருடங்களாக ஏதும் நடைபெறாத நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் அதை குறிவைத்து பொன்னியின் செல்வன் சேலைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
இதில் குந்தவை, நந்தினி, ஆதித்த கரிகாலன் என அந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் ஆகியோரின் கதாபாத்திர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படத்தில், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஆடிய சாமி சாமி என்கிற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இந்தநிலையில் அந்த பாடலுக்கு அவர் அணிந்திருந்ததை போலவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள துணிக்கடைகளில் அதே போன்ற ஆடை ஸ்ரீ வள்ளி சேலைகள் என்கிற பெயரிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தெலுங்கில் வெளியான ஒரு படத்தின் நாயகி அணிந்துள்ள உடைகள் ராஜஸ்தான் வரை உள்ள ரசிகர்களை சென்று அடைந்து இருப்பது ஆச்சரியம்தான்..