குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜுமுருகன். இந்த நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜூமுருகன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் கொம்பன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அவர் கார்த்தி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கம்போசிங் பணிகளை துவங்கி விட்டதாக ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
இந்த வருடம் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே விருமன் வெளியாகியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து இந்த வருடமே பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சர்தார் படமும் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது..