V4UMEDIA
HomeNewsKollywoodதுஷாரா விஜயனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய பாலிவுட் இயக்குனர்

துஷாரா விஜயனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய பாலிவுட் இயக்குனர்

தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன்.

அந்தப் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அவர் அடுத்ததாக மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் இந்த படம் மும்பையில் உள்ள திரையுலக விஐபிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துஷாரா விஜயனும் கலந்து கொண்டார். பாலிவுட் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், கரன் ஜோஹர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் திரையிடல் முடிந்ததும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த இயக்குனர் அனுராக் காஷ்யப், நேராக துஷாராவிடம் வந்து, “வாவ். என்ன ஒரு அருமையான நடிப்பு.. நான் உனது ரசிகன் ஆகிவிட்டேன்” என்று கூற,  துஷாரா விஜயனுக்கு மயக்கம் போடாத குறைதான்.

“ஆம்.. தூரத்திலிருந்து யாருடைய படங்களைப் பார்த்து பல வருடங்களாக ஆராதித்து வந்தேனோ, அவரே நேரில் வந்து நான் உன்னுடைய ரசிகன் என்று சொன்னால் எப்படி இருக்கும்.. சில நினைவுகள் காலத்திற்கும் அழியாமல் நம் மனதில் திரும்பத் திரும்ப வந்து செல்லும்.. அதுபோன்று ஒரு நிகழ்வாக இது அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார் துஷாரா விஜயன்

Most Popular

Recent Comments