தமிழில் வெளியான மைனா படத்தின் வெற்றியால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தவர் நடிகை அமலாபால். அதை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலாபால் இயக்குனர் விஜய்யுடனான திருமண முறிவுக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளராக மாறிய அவர் ‘கடாவர்’ என்கிற படத்தை தயாரித்து நடித்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் அமலாபால்.
தெலுங்கில் அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு வரவேற்பு இருந்த நிலையில், அங்கிருந்து வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம் என மறுத்து விட்டு தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
தெலுங்கு சினிமாவில் சில குடும்பங்களின் ஆதிக்கம் இருப்பதையும் இரண்டு கதாநாயகிகள், கவர்ச்சி, குத்துப்பாடல் என ஒரு ஒரேவிதமான டெம்ப்ளேட்டில் படங்கள் உருவாவது தனக்கு விருப்பமில்லை என்றும் அதனால் தெலுங்கில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்றும் கூறியுள்ளாராம் அமலாபால்.