திருச்சிற்றம்பலம் என்கிற படத்தில் வெற்றியை கொடுத்த சூட்டோடு சூடாக அடுத்ததாக நானே வருவேன் என்கிற இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க தயாராகி வருகிறார் நடிகர் தனுஷ்.
பத்து வருடங்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருப்பதும் அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கின்றன.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது போலவே இந்த டீசரை பார்க்கும்போது நிச்சயமாக படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கு 100% த்ரில் விருந்து இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
படத்தின் டீசரில் இரண்டு விதமான தனுஷுகளில் ஒருவர் மட்டும் ஆக்ரோஷம் காட்டி ஆக்ஷனில் இறங்கி அடிப்பதையும் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் காட்டுப்பகுதியிலேயே கதை நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த டீசரில் வெளியாகி இருக்கும் காட்சிகள் சொல்கின்றன. டீசரே இந்த அளவுக்கு இருந்தால் படம் இன்னும் வெறித்தனமாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர். இந்த டீசர் வெளியாகி நான்கு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்கிற இலக்கை தொட்டு இருப்பது நிச்சயமாக ஒரு சாதனை தான்.