கௌதம் மேனன் டைரக்ஷனில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியிலான ஆக்சன் படமாக வெளியாகி உள்ள இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை அடுத்து ஏற்கனவே விக்ரமை வைத்து தான் இயக்கி வந்த துருவ நட்சத்திரம் படத்தையும் அடுத்து ரிலீஸ் விதமாக கௌதம் மேனன் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக கௌதம் மேனன் யாருடைய படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவான ராம் பொத்தினேனியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
கௌதம் வாசுதேவ் மேனன். நடிகர் ராம் பொத்தினேனி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக வெளியான வாரியர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழில் தனக்கு ஒரு நல்ல வரவேற்பை அளிக்கும் முதல் படமாக வாரியர் இருக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான், அவர் கௌதம மேனன் டைரக்ஷனில் நடிக்க இருப்பதாக அவரே கூறி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தெலுங்கில் பிரபல இயக்குனர் போயபட்டி சீனு டைரக்ஷனில் நடித்து வருகிறார் ராம் பொத்தினேனி. அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் தெலுங்கில் லைப் ஆஃப் முத்து என்கிற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் தான் தெலுங்கில் வெளியிட்டுள்ளது. அனேகமாக ஸ்ரவந்தி மூவிஸ் கிஷோர் ரவி தான் கௌதம் மேனன் ராம் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கலாம் என்றும் கௌதம் மேலன் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.