கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் செப்டம்பர் 15 அன்று வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி என்பவர் நடித்துள்ளார் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த படத்துக்கு படக்குழுவினர் ஒருபக்கம் புரமோஷன் செய்துவரும் நிலையில் நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் என்பவர் கடந்த பல மாதங்களாகவே இந்த படத்திற்கு தொடர்ந்து புரமோஷன் செய்து வருகிறார். தமிழ்சினிமாவில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு அந்த படத்திற்கு தியேட்டர் வாசலிலேயே தனது விமர்சனத்தை நகைச்சுவை கலந்து சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் கூல் சுரேஷ்.
அந்த வகையில் எப்போது அவர் பேச துவங்கினாலும் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு ஓ போடு என்று தான் பேசவே துவங்குவார். அப்படி படம் வெளியாகும் நாள் வரை தொடர்ந்து இதே போன்று அவர் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பேசும்போது, “நாங்கள் எல்லோரும் ஒரு பக்கம் புரமோஷன் பண்ணிக் கொண்டிருந்தால் பல மாதங்களாகவே கூல் சுரேஷ் தனி டிராக்கில் அவர் ஒரு புரமோஷன் இந்த படத்திற்காக செய்து வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
படத்தின் நாயகியான சித்தி இத்னானி பேசும்போது கூட ஒரு பேட்டியில் கூல் சுரேஷ் இந்த படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.