தமிழ் சினிமாவில் எழுத்தாளர் சங்கம் என்பது இருந்தாலும் அதன் வீரியம், அதன் முக்கியத்துவம் குறித்து அதிகமாக வெளியே தெரியவந்தது இயக்குனர் பாக்யராஜ் அந்த சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தான்.
அதன் பின்னர் ஒரு சில படங்களின் கதை குறித்து அவர் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. அதேசமயம் அவர் நியாயத்தின் பக்கம் நிற்கிறார் என்று அவருக்கு ஆதரவு குவிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது இதில் பாக்கியராஜ் தலைமையிலான ஒரு அணியும் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பாக்கியராஜ் தலைவராக வெற்றி பெற்றார். இன்று எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் உறுதி மொழியை வாசிக்க பாக்யராஜ் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். இதில் தலைவர் பாக்கியராஜ் தான் என்றாலும் மற்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் அணியிலிருந்தும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.