கடந்த மாதம் அதர்வா நடிப்பில் வெளியான குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ட்ரிகர். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற 100 என்கிற படத்தை தொடர்ந்து இந்த படத்தில் அதர்வாவும் ஷாப் ஆன்டனும் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அருண்பாண்டியன், சீதா, வினோதினி, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை சுருதி நல்லப்பா தயாரித்துள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது

அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அதர்வா, சாம் ஆண்டன் மற்றும் தயாரிப்பாளர் சுருதி நல்லப்பா ஆகியோர் படம் குறித்து புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்

நடிகர் அதர்வா பேசும்போது, “இங்கு கல்லூரியில் உங்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது. மீண்டும் கல்லூரி செல்ல ஆசையாக இருக்கிறது. எங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வருவது மகிழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு நல்ல படம் செய்துள்ளோம்.

100 படத்திற்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற போது யோசித்தேன் ஆனால் இந்தப்படத்தின் கதை மிக புதுமையாக இருந்தது. நான் வழக்கமான பாத்திரங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி” என்று கூறினார்