திருச்சிற்றம்பலம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நானே வருவேன். மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து 10 வருட இடைவெளி விட்டு தனுஷ் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பம்சம்.

அது மட்டுமல்ல இந்த இருவர் கூட்டணியுடன் யுவன் சங்கர் ராஜாவும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவும் செல்வராகவனும் இணைந்து இந்த படத்திற்காக பின்னணி இசை கோர்ப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.ர்

இதுகுறித்த புகைப்படம் ஒன்றை நடிகர் தனுஷ் பகிர்ந்துகொண்டு ரசிகர்களுக்கு படத்தின் அப்டேட் தகவலை தெரியப்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் டீசரையும் படத்தையும் வரவேற்க உற்சாகமாக தயாராகி வருகிறார்கள்