நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.
இன்னொரு பக்கம் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை ஒன்று நடத்தி வருகிறார்.. அதன்மூலம் பல மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட பல பேருக்கு உணவு மற்றும் கல்வி வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதுவரை தான் நடித்து சம்பாதித்த பணத்திலும், இதுதவிர வெளியிலிருந்து உதவிக்கரம் நீட்டி அவர்களிடம் பெற்ற நன்கொடையிலும் இந்த உதவிகளை செய்து வந்தார் ராகவா லாரன்ஸ்.
இந்தநிலையில் இனிமேல் எனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை தர வேண்டாம் என மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டு அதற்கான காரணத்தை கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
இதுகுறித்து அவர் கூறும்போது நான் நடத்திவரும் அறக்கட்டளைக்கு பலரும் ஆதரவாக நின்று நன்கொடை வழங்கி வந்தீர்கள். அதேசமயம் தற்போது நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். அதனால் இந்த அறக்கட்டளைக்கு தற்போது பொருளாதார ரீதியாக இனிமேல் மக்களுக்கு சேவை செய்யும் முடிவுக்கு வந்துள்ளேன்.
எனவே எனது அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்.. எனக்கு இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவளித்து வந்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
அதேசமயம் தற்போது பி வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் தோற்றத்தையே மாற்றி இருப்பதாகவும் கூறியுள்ள அவர், அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை பார்த்த லாரன்ஸிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு ஆஜானுபாகுவான தோற்றத்தில் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளிக்கிறார் ராகவா லாரன்ஸ். நிச்சயம் சந்திரமுகி படத்தில் புதிய லாரன்சை பார்க்கலாம் என நம்புவோம் .