கடந்த சில மாதங்களாகவே தனுஷ் நடித்த படங்கள் ஓடிடி தளங்களிலும் தியேட்டர்களிலும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நானே வருவேன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் தனுஷ் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அதிகம் பேர்களால் பின் தொடரப்படுபவர் என்கிற முதலிடத்தை பெற்றுள்ள தமிழ் நடிகராக தனுஷ் மாறியுள்ளார்.
சுமார் 11 மில்லியன் பேர்கள் தனுசை அவரது சோசியல் மீடியா பக்கத்தை பின் தொடர்கின்றனர்
தென்னிந்திய அளவில் இதே சாதனையை பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.