சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகன்களில் ஒருவரான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல இளையமகள் சௌந்தர்யாவுக்கு அஸ்வின் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் வேத் என்கிற ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஸ்வினுடன் விவாகரத்து பெற்று பிரிந்த சௌந்தர்யா விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு வீர் என பெயர் வைத்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இன்று (செப்டம்பர் 11) வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி பிறந்துள்ளார். அபரிமிதமான கடவுள் அருளும் எங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் விசாகன், வேத மற்றும் நான் மூவரும் வேத்தில் தம்பியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான்காவது முறையாக மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். இதுகுறித்து சவுந்தர்யா விசாகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.