தமிழ் சினிமாவில் டைம் மெஷின் என்கிற கால எந்திரத்தை மையப்படுத்தி உருவான படங்கள் என்றால், விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான இன்று நேற்று நாளை மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான 24 ஆகிய இரண்டு படங்களை மட்டும் தான் சொல்ல முடியும்.
அந்த வகையில் இந்த கதையம்சத்தில் குறைவான படங்களே வந்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழில் கணம் என்றும் தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்றும் இரு மொழிப்படமாக வெளியானது கணம் படம்.
ந்தப்படமும் டைம் மெஷின் ட்ராவலை மையப்படுத்தியே உருவாகி உள்ளது. ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு நடிகை அமலா இந்த படத்தில் நடித்துள்ளார்.
சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியானாலும் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று அருமையான ஃபீல் குட் படம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த படத்திற்கு திரையிட்ட திரையரங்குகளில் காட்சிகள் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது