ஏற்கனவே 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி ஆகிய படங்களில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் வெற்றிசமீபத்தில் வெளியான ஜீவி-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்த படத்தின் நாயகன் வெற்றி நடித்துவரும் படம் இரவு.
இந்த படத்தை இயக்குனர் ஜெகதீசன் சுப்பு என்பவர் இயக்கி வருகிறார் இவர் விக்ராந்த் நடித்த பக்ரீத் என்கிற படத்தை இயக்கியவர். இந்த இரவு படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.
ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈசிஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.
கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.