கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களை ஒரு நடன இயக்குனராக ஆட்டுவித்து வருபவர் பிருந்தா மாஸ்டர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே ஷினாமிகா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படமாக தக்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். குறுகிய காலத்திலேயே இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார்
பிருந்தா மாஸ்டர். ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, இன்று சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறியது
.
இந்த நிகழ்வில் ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.
இந்த படத்தின் டீசரை பார்த்த பலரும் ஆக்சன் காட்சிகளில் பிருந்தா மாஸ்டர் மிரட்டி இருக்கிறார் என்று பாராட்டினார்கள் ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கௌதம் மேனன் பேசும்போது பிருந்தா ஒரு மான்ஸ்டர் என்று குறிப்பிட்டு பாராட்டினார்.
“என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்
“பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது, இப்போது அவரது இரண்டாவது படம் அதற்கு நேர் எதிராக ஆக்ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது” என்று பாராட்டினார் இயக்குனர் பாக்கியராஜ்