90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, தற்போது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி நடத்துபவராக, சினிமா தயாரிப்பாளராக என தற்போதும் திரையுலகில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் லண்டன் சென்றிருந்தபோது, தனது வீட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன் என்று ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் குறுகிய மனம் கொண்ட சிலர் குஷ்புவை விமர்சித்தனர்.
அதாவது அரசியலில் மக்களுக்கு சேவை செய்வதாக நுழைந்திருக்கும் குஷ்பு இப்படி லண்டனில் வீடு வாங்கும் அளவிற்கு ஆடம்பரமாக இருக்கிறாரே என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய புதிய வீடு என்றுதான் சொன்னேனே தவிர அது என் சொந்த வீடு ஆகிவிடுமா..? முட்டாள்களே.. வாடகை வீடு என ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா..? நீங்கள் கேள்விப்பட்டதில்லையா..? ஒரு பெண் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்தால் ஏன் பலருக்கு வயிறு எரிகிறது என்று புரியவில்லை” என பதில் அளித்துள்ளார் குஷ்பு