மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தில் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் படவாய்ப்புகள் வந்தன. தமிழில் ஏற்கனவே தனுஷ் ஜோடியாக கொடி மற்றும் அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
ஆனாலும் அவர் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அவர் கதாநாயகியாக நடித்துள்ள கார்த்திகேயா-2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தமிழில் சைரன் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்குகிறார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது..