காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், அதைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது படங்கள் அனைத்தையும் கவனித்து பார்த்தால் பெரும்பாலும் அவர் சீரியஸான கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை உணரமுடியும்.
அவரது இந்த இமேஜை மாற்றும் விதமாக உருவாகியுள்ள படம் தான் சொப்பன சுந்தரி. இந்தப்படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த வேடத்தில் நடித்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். லாக்கப் என்கிற படத்தை இயக்குனர் சார்லஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
“இதுவரை சீரியஸான கேரக்டரில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.. அவர் எல்லா விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.. அவரிடம் உள்ள ஒரு புதிய முகத்தை காட்டும் விதமாக இந்த படத்தில் முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்க வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார் சார்லஸ்.
மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு முன்பாக ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி மூலம் பிரபலமான பெயர் தான் இந்த சொப்பன சுந்தரி. இந்த வார்த்தை இரண்டு பாடல்களில் பயன்படுத்தப்பட்டது இப்போது ஒரு படத்தின் தலைப்பாகவே மாறிவிட்டது.