V4UMEDIA
HomeNewsKollywoodநட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

இயக்குனர் பா ரஞ்சித் டைரக்சனில் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நாடகக் கலையை மையப்படுத்தி ஒவ்வொரு நாடக நடிகர்களுக்கும் இருக்கும் காதல், நட்பு, உறவுச்சிக்கல், பிரச்சனை என எல்லாவற்றையும் இந்த படத்தில் அலசி இருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பெரிய படுத்தியுள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

தனது பாராட்டில் ரஜினிகாந்த் கூறும்போது, “நீங்கள் இதுவரை இயக்கியதில் மிகவும் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இந்த படத்தை ரசித்து பார்த்தேன்.

என்னுடைய ஆரம்ப கால நாடக வாழ்க்கையை இந்த படம் ஞாபகப்படுத்தியது. ஒரு நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது” என்று அவர் கூறியதாக பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இந்த பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்

Most Popular

Recent Comments