தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக இருக்கும் மிக பிரமாண்டமான படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி 50 வருடங்களாக பல வாசகர்களால் படிக்கப்பட்டு ஒவ்வொருவர் மனதிலும் குடியிருக்கும் இந்த கதையும் கதாபாத்திரங்களும் தற்போது சினிமாவாக திரையில் வர இருக்கின்றனர்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாவதை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த இருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர்ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து கலந்து கொள்ள இருக்கின்றனர் இந்த தகவலை பட தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது..















