V4UMEDIA
HomeNewsKollywoodமாபொசி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த மெட்டிஒலி திருமுருகன்

மாபொசி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த மெட்டிஒலி திருமுருகன்

சின்னத்திரை நடிகராக இருந்து பின்னர் படிப்படியாக வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது கன்னிமாடம் படம் மூலம் இயக்குனராகவும் மாறியவர் நடிகர் போஸ் வெங்கட். இந்தநிலையில் தற்போது தனது இரண்டாவது படமாக மாபொசி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு மெட்டி ஒலி சீரியல் இயக்குனரும் எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை இயக்கியவருமான திருமுருகன் வருகை தந்தார்.

விமலின் பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி விமல் தனது பிறந்த நாளை கொண்டாட, அன்றைய தினமே திருமுருகனும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

படப்பிடிப்பில் போஸ் வெங்கட் இயக்கிய காட்சிகளை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார் மெட்டி ஒலி திருமுருகன்

Most Popular

Recent Comments