சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி என்பவர் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.. இதை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதியும் கலந்து கொண்டனர்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் தான் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. முதல் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அந்த விழாவில் இயக்குனர் கௌதம் மேனன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது கமலை பார்த்து, உங்களுடைய எந்த படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கட்டும் அல்லது எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கட்டும் நீங்களே சொல்லுங்கள் என்று ஒரு கோரிக்கை வைத்தார்

அதற்கு கமல் பதிலளித்து பேசும்போது என்னுடைய எந்த படத்தின் ரீமேக்கிலும் நீங்கள் நடிக்க வேண்டாம்.. எந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நீங்கள் நடிக்க வேண்டாம்.. அதற்கு பதிலாக என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என ஒரு புதிய ஆலோசனையைக் கூறினார் விக்ரம் பார்ட்-3க்கு இப்போதே அடி போடுகிறாரோ என ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.