சிவகார்த்திகேயன் படங்களை கவனித்து பார்த்தால் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஹிட்டான வசனங்களை எடுத்து அதை வைத்து அவரது படத்திற்கு பாடல் வரிகளை உருவாக்கி விடுகிறார்கள் என்பது தெரிய வரும்.. பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி விடுகிறது.
இதற்கு முன்பு இதே போல என்னம்மா இப்படி பண்றிங்களேமா என லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய புகழ்பெற்ற வார்த்தைகளை வைத்து சிவகார்த்திகேயன் பாடல் ஆரம்பித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதேபோல ஜென்டில்மேன் படத்தில் செந்தில் கவுண்டமணி பேசும் ஜலபுல ஜங் என்கிற வார்த்தையை வைத்து டான் படத்தில் ஒரு பாடலை உருவாக்கி அதையும் ஹிட் கொடுத்து விட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரின்ஸ் என்கிற படத்தில் இருந்து தற்போது பிம்பிலிக்கி பிலாப்பி என்கிற லிரிக் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
பிம்பிலிக்கி பிலாப்பி என்கிற இந்த வார்த்தை எண்பதுகளில் பாண்டியராஜன் நடித்த ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் என்கிற படத்தில் பொருட்களை ஏலம் விடும் காட்சியில் பைத்தியம் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக கூறுவதுபோல இடம்பெற்று ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி வார்த்தையாகும்.
பாடலாசிரியர் விவேக் இந்த வரிகளை வைத்து அனிருத் இசையில் ஒரு பாடலையே உருவாக்கி விட்டார். பாடல் வெளியான ஒரு நாளிலேயே இந்த பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது