V4UMEDIA
HomeNewsKollywoodபிரபுதேவா பட வில்லனுக்கு திருமணம் ; டாக்டர் காதலியை மணந்தார்

பிரபுதேவா பட வில்லனுக்கு திருமணம் ; டாக்டர் காதலியை மணந்தார்

பிரபுதேவா தற்போது நடித்துவரும் படங்களில் பகீரா படமும் ஒன்று. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இந்தப்படத்தில் வில்லனாக கோபிநாத் ரவி என்பவர் நடித்து வருகிறார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபர் மிஸ்டர் இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அதுமட்டுமல்ல மாடலாகவும் இவருக்கு இன்னொரு முகம் உண்டு.

இந்த நிலையில் இருவருக்கும் டாக்டர் பிரியா என்பவருக்கும் சென்னையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கோபிநாத் ரவியும் பிரியாவும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள், முழு சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த திருமண நிகழ்வில் நடிகர்கள் சரத்குமார், ராதிகா, சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் மகேந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

பிரியாவை பொருத்தவரை அவர் டாக்டராக இருந்தாலும் தனது கணவர் கோபிநாத் ரவியின் சினிமா லட்சியத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு அவர் சினிமாவில் நடிகராக வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறாராம்.

Most Popular

Recent Comments