V4UMEDIA
HomeNewsKollywoodயோகிபாபுவின் யானைமுகத்தான் அவதாரம்

யோகிபாபுவின் யானைமுகத்தான் அவதாரம்

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது அன்றைய தினம் பலரும் புதிய பட அறிவிப்புகளையும் தங்கள் பட அப்டேட்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர் இதில் ஒருபடி மேலே போய் யானைமுகத்தான் என்கிற பெயரிலேயே புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மிதிலா என்பவர் இந்த படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் யோகிபாபு, ரமேஷ் திலக் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இரண்டு பேரின் பேருமே கணேஷ் என்பது தான்.

இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக  கருணாகரனும் நடிக்கிறார்கள். ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ),  நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.

இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக இயக்கியுள்ளார் டைரக்டர்.

இப்படத்தின்  படப்பிடிப்பு சென்னையில் எளிய ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

Most Popular

Recent Comments