தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமான தமன்னா, கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இன்னும் வரவேற்பு குறையாத தமன்னா, இந்தியிலும் கூட நடித்துவிட்டார்.
மலையாளத் திரையுலகில் ஏற்கனவே மோகன்லாலுக்கு ஜோடியாக நடிப்பார் என சில வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டு வந்து அது நடைபெறாமல் போனது. இந்த நிலையில் தற்போது மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று கேரளாவில் நடைபெற்றது. இதில் தமன்னா நேரடியாக கலந்து கொண்டார்.
இந்த படத்தை அருண்கோபி என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற படத்தை இயக்கி அந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது