எப்படி எல்லாம் மனிதர்களால் சீட்டிங் பண்ண முடியும் என்பதை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் உருவான படங்கள் தான் திருட்டுப்பயலே, நான் அவனில்லை மற்றும் சதுரங்க வேட்டை இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகர்களாக நடித்த ஜீவன் மற்றும் நட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்.? அதுவும் சீட்டிங் என்கிற கதை களமாகவே அமைந்துவிட்டால்..?

அப்படி ஒரு படம்தான் இவர்கள் நடிப்பில் உருவாக இருக்கும் சிக்னேச்சர். பக்ரீத் என்கிற படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ஹரீஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.. இதில் நாட்டி, ஜீவன் இருவரும் கலந்துகொள்ள, இயக்குனர் ஹரி கிளாப் அடித்து படத்தை துவங்கி வைத்தார்.

மனிதர்களுக்கு அவர்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் எவ்வளவு முக்கியமானது அந்த கையெழுத்து தான் ஒருவரின் தலையெழுத்தையே கூட தீர்மானிக்கும். அப்படி சாமானிய மக்களோடு பழகி அவர்களின் அவர்களது ரகசிய டேட்டாவை திருடும் கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார்.
அந்த டேட்டாவை பயன்படுத்தி மக்களை வேட்டையாடுபவராக நட்டி நடிக்கிறார். அந்த வகையில் இரண்டு பேருமே இந்த படத்தில் ஆன்ட்டி ஹீரோக்களாக தான் நடிக்கிறார்கள் என்பதால், சதுரங்க வேட்டையை மிஞ்சும் விதமாக இந்தப்படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.