பிக்பாஸ் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் ரவீந்தர் சந்திரசேகரன். அதைத்தொடர்ந்து சுட்டகதை, முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் வெளியிட்டும் உள்ளார். ஆனாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினசரி நேரலையில் விமர்சிப்பதன் மூலம் இவருக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல நடிகை வனிதா நான்காவது திருமணம் செய்த சர்ச்சை குறித்து தொடர்ந்து வீடியோக்களாக பதிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் ரவீந்தர் சந்திரசேகரன்.
அதேபோல சின்னத்திரையில் விஜேவாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக மாறியுள்ளவர் மகாலட்சுமி. தற்போது ரவீந்தர் சந்திரசேகரனும் மகாலட்சுமியும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து ரவீந்திரன் சந்திரசேகர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறும்போது, “எல்லோரும் மகாலட்சுமி மாதிரி பெண் வேண்டும் என கேட்பார்கள்.. ஆனால் எனக்கு மகாலட்சுமியே கிடைத்து விட்டார்” என்று கூறியுள்ளார்.
ரவீந்தர் சந்திரசேகரன் தற்போது தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகாலட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.