V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் 67 படம் குறித்து வெளியான புதிய அப்டேட் தகவல்

விஜய் 67 படம் குறித்து வெளியான புதிய அப்டேட் தகவல்

தற்போது முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ள விஜய் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தையும் தாண்டி, விஜய் அடுத்ததாக தமிழில் நடிக்க இருக்கும் அவரது 67வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. காரணம் ஏற்கனவே மாஸ்டர் என்கிற ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்வது தான்.

அதுமட்டுமல்ல விக்ரம் என்கிற மாபெரும் ஹிட்டையும் கொடுத்துவிட்டு, மீண்டும் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்கு, மும்மடங்கு என அதிகரித்துள்ளது.

மாஸ்டர் படத்தையும் விக்ரம் படத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி படமாக விஜய்யின் 67வது படத்தை கொடுக்க வேண்டும் என்பதால் அதன் தீவிர கதை திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

வழக்கம் போல எப்போதுமே லோகேஷ் கனகராஜ் படங்களின் கதை விவாதத்தில் இடம்பெறும் அவரது ஆஸ்தான நண்பர் இயக்குனர் ரத்னகுமார் இந்த கதை விவாதத்தில் இணைந்துள்ளார்.

இப்போது புதிய தகவலாக சித்தார்த் நடித்து வெளியான ஜில் ஜங் ஜக் என்கிற படத்தை இயக்கிய தீரஜ் வைத்தியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்டு வருகிறார். இவர்கள் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தும் விதமாக சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு காமெடி காட்சிகள் ரொம்பவே குறைவாக இருந்ததால் இந்தப்படத்தில் அந்த குறை தெரியக்கூடாது என்பதற்காகவே காமெடி காட்சிகளுக்கும் வசனங்களுக்குமான ஆலோசனைக்காகவே இயக்குனர் தீரஜ் வைத்தி இந்த கதை விவாதத்திற்குள் நுழைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments