கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இசைக் கச்சேரி சீசன் என சொல்வது போல தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா ஒரு பக்கம், அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஒரு பக்கம் என இன்னிசை கச்சேரி நடத்தி இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
அந்த வகையில் இளையராஜா கோவை மற்றும் மதுரையில் இசை திருவிழா நடத்தினார். அவரது மகன் யுவன் சங்கர் ராஜா மலேசியாவையே தனது இசையால் கடந்த மாதம் இரண்டு நாட்கள் கட்டிப்போட்டார்
இது ஒரு பக்கம் இருக்க தற்போது யுவன் சங்கர் ராஜா வரும் செப்டம்பர் பத்தாம் தேதி சென்னையில் மீண்டும் இசை திருவிழாவை நடத்துகிறார்.
இந்த நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த இசை திருவிழாவுக்கு யூ அண்ட் மீ என பெயர் வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா
இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும், தான் சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக அடுத்து சென்னையில் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..