V4UMEDIA
HomeNewsKollywoodசிங்கிள்.. டபுள்ஸ்.. ட்ரிபிள்ஸ் ; கோப்ரா படத்தை கலாய்த்த மியா ஜார்ஜ்

சிங்கிள்.. டபுள்ஸ்.. ட்ரிபிள்ஸ் ; கோப்ரா படத்தை கலாய்த்த மியா ஜார்ஜ்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் உருவாகியுள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியாகிறது.

இந்தப் படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன் இவர்கள் தவிர நடிகை மியா ஜார்ஜ், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் நடிகை மியா ஜார்ஜ் கலந்துகொண்டார். தமிழில் அமர காவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ், இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அவர் மேடையில் பேசும்போது இந்த படத்தில், நான் ஒப்பந்தமான சமயத்தில் சிங்கிளாக இருந்தேன்.. கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டு பின் துவங்கியபோது எனது திருமணம் முடிந்திருந்தது.

மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டு படப்பிடிப்பு துவங்கியபோது நான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தேன் என்றார் மியா ஜார்ஜ்..

உடனே நாயகன் விக்ரம், இதோ இப்போது படம் ரிலீஸ் ஆகப்போகிறது குழந்தையும் பிறந்து விட்டது என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் மேலும் மியாவின் குழதையை கோப்ரா பேபி என்றும் கொஞ்சினார் விக்ரம்.

Most Popular

Recent Comments