வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் பத்து நண்பர்களில் ஒருவராக அறிமுகமானாலும் பளிச்சென ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நிதின் சத்யா. அதை தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்தவர் சத்தம் போடாதே என்கிற படத்தில் சாடிஸ்ட் வில்லனாகவும் நடித்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/08/koduva-2-1024x683.jpg)
பின்னர் தயாரிப்பாளராக மாறி ஜருகண்டி, லாக்கப் உள்ளிட்ட படங்களையும் தயாரித்தார். இந்த நிலையில் தற்போது கொடுவா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நிதின் சத்யா. இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்கிறார்
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/08/koduva-1-650x1024.jpg)
இந்த படத்தை பேச்சிலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா என்பவர் இயக்குகிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/08/koduva-4-1024x683.jpg)
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. படத்தை ஒரே கட்ட படப்பிடிப்பாக்க நடத்தி முடிக்க தீர்மானித்துள்ளார்