இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர் தான் நடிகர் நானி. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து ஹிட்டாகும் படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் தெலுங்கு தேசத்தை தாண்டி தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றுள்ளார் நானி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான சியாம் சிங்கா ராய் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் தசரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒதலா என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசியவிருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்..

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது இந்த படத்தில் நானி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நாயகன் நானி தூசி படிந்த கைலி சட்டையுடன் நானி அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டி அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் இந்தப் படம் எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் உருவாகும் கதை அம்சத்துடன் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படம் பான் இந்தியா ரிலீசாகும் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது என்றும். அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வரும் 2023 மார்ச் 30ல் இந்தப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது