விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தியேட்டர் ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் கோப்ரா. இமைக்கா நொடிகள் என்கிற படத்தின் மூலம் டெக்னிக்கலாக அசத்திய இயக்குனர் அஜய் ஞானமுத்து, இந்தப்படத்திலும் அதைத் தொடர்ந்து உள்ளார் என்பது சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது.
குறிப்பாக கணிதத்தை பயன்படுத்தி இந்த படத்தின் காட்சிகளை வித்தியாசமான முறையில் உருவாக்கி இருக்கிறார் என்பதும் தெரிகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன், மியா ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடிகள் ஓடும் விதமாக மிகப்பெரிய படமாக வெளியாக இருக்கிறது.
இதற்கு முன்பு படையப்பா, தசாவதாரம் ஆகிய படங்கள் மூன்று மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியிருந்தாலும் ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்திருந்தன.
இதற்கு முன்பு வெளியான விக்ரமின் படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் கோப்ரா இந்த மூன்று மணி நேர படத்தையும் ரசிகர்களை உற்சாகமுடன் பார்க்க வைக்கும் என்பதை ட்ரெய்லரை வைத்தே உறுதியாக சொல்லலாம். வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது